Friday, June 5, 2015

உலகளாவிய சகோதரத்துவம் - இஸ்லாமியப் பார்வையும் படிப்பினைகளும் - பகுதி 1..!!

இன்றைய உலகளாவிய சூழலில் மக்களிடையே தோன்றும் கேள்விகளில் சில,

-          இஸ்லாம் இந்த உலகில் வந்தது எதற்க்காக?
-          இஸ்லாம் இந்த உலகிற்கு வழங்கக்கூடிய செய்தி என்ன?
-          இஸ்லாம் இந்த உலகிற்கு வந்ததால் யாருக்கு என்ன லாபம்?




இந்த எல்லாக் கேள்விகளுக்கும் ஒரே பதில் மனிதகுல ஒருங்கினைப்பும், உலகளாவிய சகோதரத்துவமும் என்பதை நபி (ஸல்) அவர்களின் மக்கத்து வாழ்கையின்போது நிகழ்ந்த இந்தச் சம்பவத்தின் மூலம் பதிலாகப் பெறமுடிகிறது..

முஹம்மது நபி (ஸல்) அவர்களை அமர் பின் அபஸா (ரலி) என்ற ஒருவர் சந்திக்கிறார். அது நபிகளாருக்கு நுபுவ்வத்தின் ஆரம்பகட்டமாக இருந்தது. அப்போது நபிகளாரை (ஸல்) நோக்கி நான் கேட்டேன் நீங்கள் யார்?. அதற்க்கு அவர்கள் நான் அகிலத்தின் அதிபதியால் மக்களிடம் அனுப்பப்பட்ட நபி என்று கூறினார்கள்.

இதற்க்கு திரும்பவும் அமர் (ரலி) அவர்கள் நபி என்றால்? என்று கேட்க்க. அதற்க்கு நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ் என்னைத் இந்த உலக மக்களுக்கு தூதராக அனுப்பிவைத்திருக்கிறான் என்று சொன்னதும் திரும்பவும் அம்ர் (ரலி) கேட்டார்கள் அப்படியானால் என்ன செய்தியை கொடுத்து அல்லாஹ் உங்களை தூதராக அனுப்பியிருக்கிறான்? என்று.

அதற்க்கு, நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ் என்ன தூதராக அனுப்பியது மனிதகுலத்தை ஒன்றிணைக்க வேண்டியும், சிலைகள் அனைத்தும் உடைத்து நொறுக்கப்பட்டு இணைவைப்பு முழுவதுமாக ஒழிக்கப்பட்டு தவ்ஹீத் நிலைநாட்டப்படவேண்டும் என்று கூறினார்கள்.

இன்றைய சூழலில் கருத்துவேறுபாடுகளின் காரணமாக ஓர் முஸ்லிம் இன்னொருவர் மீது வசைமாறிப் பொழிவதையும் பல்வேறு வகையில் அவமதிக்கப்படுவதும் சாதாரண நிகழ்வாக இருந்துவரும் நிலையில், ஓர் முஸ்லிமின் உயிரும் கௌரவமும் பேணிப்பாதுகாக்க வேண்டிய தார்மீகப் பொறுப்பு ஒவ்வோர் முஸ்லிமிற்கும் இருக்கிறது என்பதை விளக்கும் ஜூமுஆ தொடர் உரையின் முதல் பகுதி.

ஜுமுஆ சிறப்புரை @ மஸ்ஜிதுல் இஹ்ஸான், கோவை

நாள்: 06/05/15

உரை: மௌலவி. முஹம்மது இஸ்மாயில் இம்தாதி

உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்


No comments:

Post a Comment