Friday, June 26, 2015

ரமளான் வழங்கும் பாவமன்னிப்பும் புது வாழ்வும்..!!



சென்ற வார ஜூமுஆ உரையின் வாயிலாக ரமாளான் மாதம் நோன்பு நோர்ப்பதன் மூலம் மனித தக்வவினை பெறக்கூடும் என்று இறைவன் கூறுவதன் மூலம், இறையச்சத்தை நம் வாழ்வில் இரண்டறக்கலந்த ஒன்றாக இணைக்கும் பாலமாக ரமாளான் அமைந்துள்ளது என்பதைக் குறித்துக் கேட்டோம்.



சென்ற வாரத்தின் தொடர்ச்சியாக இந்த வாரம் இறையச்சத்தின் வாயிலாக தௌபா என்ற உளப்பூர்வமாக இறைவனிடம் பிழைபொறுக்க வேண்டுதல் என்பதன் மூலம் மனிதன் எவ்வாறு தனது கடந்த கால வாழ்வில் தான் செய்த அனைத்து பாவங்களை விட்டும் மீண்டு உளப்பூர்வமாக பாவமன்னிப்பு தேடும்போது, அவனது வாழ்வே மீண்டும் பிறந்த குழந்தையை போன்று அப்பழுக்கற்ற நிலையை அடைகிறது என்பதனை தெளிவுபடுத்தும் 2015-ஆம் ஆண்டின் ரமளானின் இரண்டாம் ஜுமுஆ சிறப்புரையின் இரண்டாம் பகுதி.

ஜுமுஆ சிறப்புரை @ மஸ்ஜிதுல் இஹ்ஸான், கோவை

நாள்: 06/26/15

உரை: மௌலவி. முஹம்மது இஸ்மாயில் இம்தாதி


உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்

Monday, June 22, 2015

ரமளானின் அருள் வளங்கள் யாருக்கு?

கோவை மஸ்ஜிதுல் இஹ்ஸானில் இந்த வருட (2015) ரமளானின் நான்காம் நாள் இரவு தொழுகைக்குப் பின் நிகழ்த்தப்பட்ட சிற்றுரை.



ரமாளான் மாதத்தில் இறைவனது அருளுக்கும் கருணைக்கும் யாருக்கு சென்றடைகிறது, மற்றும் இந்த மாதத்தினை அடைந்தும் இந்த மாபெரும் அருள் மழையினை தவரவிடுகிரவர்களைக் குறித்து விளக்கும் சிற்றுரை.

தலைப்பு: ரமளானின் அருள் வளங்கள் யாருக்கு?

நாள்: 21/06/15 (04)

உரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி

இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்

Sunday, June 21, 2015

ரமாளான் அருளும் மன்னிப்பு..!!

கோவை மஸ்ஜிதுல் இஹ்ஸானில் இந்த வருட (2015) ரமளானின் மூன்றாம் நாள் இரவு தொழுகைக்குப் பின் நிகழ்த்தப்பட்ட சிற்றுரை.



ரமாளான் மாதத்தில் இறைவன் தனது அடியார்களின் பாவத்தை எவ்வாறு மன்னித்து அவர்களை தனது அருளுக்கும் கருணைக்கும் உகந்தவர்களாக மாற்றுகிறான் என்பதை விளக்கும் சிற்றுரை.

தலைப்பு: ரமாளான் அருளும் மன்னிப்பு

நாள்: 20/06/15 (03)

உரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி

இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்


Friday, June 19, 2015

ரமளானும் நம் குர்ஆனிய தொடர்பும்..!!

கோவை மஸ்ஜிதுல் இஹ்ஸானில் இந்த வருட (2015) ரமளானின் இரண்டாம் நாள் இரவு தொழுகைக்குப் பின் நிகழ்த்தப்பட்ட சிற்றுரை.



ஒவ்வொரு ஆண்டு ரமாளான் மாதத்திலும் நம்முடைய குர்ஆனுடனான தொடர்பு எவ்வாறு இருக்கிறது, அது உண்மையில் எப்படி அமையவேண்டும் என்பதை விளக்கும் சிற்றுரை.

தலைப்பு: ரமளானும் நம் குர்ஆனிய தொடர்பும்

நாள்: 19/06/15 (02)

உரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி

இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்



தக்வா - நோன்பு தரும் பயிற்சி - பாகம் 1..!!

(உண்மையில், உங்கள் இறைவனிடம் அதிக கண்ணியம் வாய்ந்தவர் உங்களில் அதிக இறையச்சம் கொண்டவர்கள்தாம். அல்-குர்ஆன் (49:13))

இறைவன் தனது திருமறையில் ரமாளான் மாத நோன்பினைக் குறித்த முதல் வசனம் ஹிஜ்ரி இரண்டாம் ஆண்டு இறக்கியருளினான். அவ்வசனம் நோன்பின் மூலம் மனிதன் எதனை அடையவேண்டும் என்பதை விரிவாக இவ்வாறு கூறுகிறது.

இறைநம்பிக்கையாளர்களே! உங்களுக்கு முன் இருந்த (நபிமார்களைப் பின்பற்றிய)வர்கள் மீது கடமையாக்கப்பட்டது போல், உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டிருக்கிறது. (அதன் மூலம்) நீங்கள் இறையச்சமுள்ளவர்களாய்த் திகழக்கூடும். அல்-குர்ஆன் (2:183)

தக்வா என்ற இறையச்சம் என்பது தொழுகை, ஜகாத், ஹஜ் போன்ற வழிபாடுகளில் போன்றவற்றில் மட்டுமல்லாமல் மனிதனின் அத்துனை வாழ்வியல் நடவடிக்கையுடன் சம்பந்தப்பட்ட ஒன்று என்பதை திருமறையின் சூரா அல்-அன்ஆமில் 151 முதல் 153 வசனங்கள் மூலம் இறைவன் இறையச்சமுள்ளவர்களுக்கு வழங்கியுள்ள நிபந்தனைகள் குறித்து கூறுவதன் மூலம் விளங்கமுடியும்.

ஓர் மனிதனை தவாறான பாதையில் இருந்து நேரிய நல்வழியில் உறுதியுடன் நிலைபெற வைப்பதே அவனது தக்வா என்ற இறையச்சத்தின் அடையாளம்.

தக்வவினைக் குறித்தும் நோன்பின் மூலம் அந்த தக்வாவினை அடைவதைக் குறித்து தெளிவுபடுத்தும் 2015-ஆம் ஆண்டின் ரமளானின் முதல் ஜுமுஆவில் நிகழ்த்தப்பட்ட தொடர் ஜுமுஆ உரையின் முதல் பகுதி.

ஜுமுஆ சிறப்புரை @ மஸ்ஜிதுல் இஹ்ஸான், கோவை

நாள்: 06/19/15

உரை: மௌலவி. முஹம்மது இஸ்மாயில் இம்தாதி

உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்


Thursday, June 18, 2015

மீண்டும் புதிய வாழ்வு..!!



கோவை மஸ்ஜிதுல் இஹ்ஸானில் இந்த வருட (2015) ரமளானின் முதல் நாள் இரவு தொழுகைக்குப் பின் நிகழ்த்தப்பட்ட சிற்றுரை.

தலைப்பு: மீண்டும் புதிய வாழ்வு

நாள்: 18/06/15 (01)

உரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி

இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்

Friday, June 12, 2015

உலகளாவிய சகோதரத்துவம் & நபிவழியின் ஒளியில் வாழ்வு..!!



இன்று நபிவழி என்ற சொல்லுக்கு குறுகிய பொருள் கொண்டு வணக்கவழிபாடுகள், திருமணம், பிறப்பு, இறப்பு போன்ற ஒரு சில காரியங்களில் மட்டும் நபிமொழியினைப் பேணுவதும். மற்ற வாழ்வியல் விவகாரங்களில் அதனைக்குறித்த சிந்தனையில்லாமல் இருப்பதும் நம் சமூகத்தில் காணப்படுகிறது.

நபிவழி என்பது இன்றளவில் பேசப்படும் ஒன்றாக இருக்கிறதே தவிர சரியாக பேணப்படுவதில்லை என்பது நிதர்சனம்.

நபிவழி என்ற பெயரில் இன்றளவும் கருத்துவேறுபாடுகளின் காரணமாக ஓர் முஸ்லிம் இன்னொருவர் மீது வசைமாறிப் பொழிவதையும், ஒருவர் மற்றொருவரை வழிகெட்டவர் என்றும் நிராகரிப்பவர் என்றும் கூறி அவரை இஸ்லாமிய வட்டத்தில் இருந்து விளக்க முற்படுவதும் அன்றாட நிகழ்வாக இருந்துவரும் நிலையில், நபிவழி என்பது மனித இனத்தை ஒன்றுதிரட்டவும் அதன் வாழ்வியல் நெறியினை இறைவழிகாட்டலின் அடிப்படையில் அமைத்துக்கொண்டு மேன்பட்ட சமூகமாக மறுமலர்ச்சி பெறுவதே நபிவழியின் ஒட்டுமொத்தக் குறிக்கோள் என்பதை விளக்கும் ஜூமுஆ தொடர் உரையின் இரண்டாம் பகுதி.

ஜுமுஆ சிறப்புரை @ மஸ்ஜிதுல் இஹ்ஸான், கோவை

நாள்: 06/12/15

உரை: மௌலவி. முஹம்மது இஸ்மாயில் இம்தாதி

உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்

Friday, June 5, 2015

உலகளாவிய சகோதரத்துவம் - இஸ்லாமியப் பார்வையும் படிப்பினைகளும் - பகுதி 1..!!

இன்றைய உலகளாவிய சூழலில் மக்களிடையே தோன்றும் கேள்விகளில் சில,

-          இஸ்லாம் இந்த உலகில் வந்தது எதற்க்காக?
-          இஸ்லாம் இந்த உலகிற்கு வழங்கக்கூடிய செய்தி என்ன?
-          இஸ்லாம் இந்த உலகிற்கு வந்ததால் யாருக்கு என்ன லாபம்?




இந்த எல்லாக் கேள்விகளுக்கும் ஒரே பதில் மனிதகுல ஒருங்கினைப்பும், உலகளாவிய சகோதரத்துவமும் என்பதை நபி (ஸல்) அவர்களின் மக்கத்து வாழ்கையின்போது நிகழ்ந்த இந்தச் சம்பவத்தின் மூலம் பதிலாகப் பெறமுடிகிறது..

முஹம்மது நபி (ஸல்) அவர்களை அமர் பின் அபஸா (ரலி) என்ற ஒருவர் சந்திக்கிறார். அது நபிகளாருக்கு நுபுவ்வத்தின் ஆரம்பகட்டமாக இருந்தது. அப்போது நபிகளாரை (ஸல்) நோக்கி நான் கேட்டேன் நீங்கள் யார்?. அதற்க்கு அவர்கள் நான் அகிலத்தின் அதிபதியால் மக்களிடம் அனுப்பப்பட்ட நபி என்று கூறினார்கள்.

இதற்க்கு திரும்பவும் அமர் (ரலி) அவர்கள் நபி என்றால்? என்று கேட்க்க. அதற்க்கு நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ் என்னைத் இந்த உலக மக்களுக்கு தூதராக அனுப்பிவைத்திருக்கிறான் என்று சொன்னதும் திரும்பவும் அம்ர் (ரலி) கேட்டார்கள் அப்படியானால் என்ன செய்தியை கொடுத்து அல்லாஹ் உங்களை தூதராக அனுப்பியிருக்கிறான்? என்று.

அதற்க்கு, நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ் என்ன தூதராக அனுப்பியது மனிதகுலத்தை ஒன்றிணைக்க வேண்டியும், சிலைகள் அனைத்தும் உடைத்து நொறுக்கப்பட்டு இணைவைப்பு முழுவதுமாக ஒழிக்கப்பட்டு தவ்ஹீத் நிலைநாட்டப்படவேண்டும் என்று கூறினார்கள்.

இன்றைய சூழலில் கருத்துவேறுபாடுகளின் காரணமாக ஓர் முஸ்லிம் இன்னொருவர் மீது வசைமாறிப் பொழிவதையும் பல்வேறு வகையில் அவமதிக்கப்படுவதும் சாதாரண நிகழ்வாக இருந்துவரும் நிலையில், ஓர் முஸ்லிமின் உயிரும் கௌரவமும் பேணிப்பாதுகாக்க வேண்டிய தார்மீகப் பொறுப்பு ஒவ்வோர் முஸ்லிமிற்கும் இருக்கிறது என்பதை விளக்கும் ஜூமுஆ தொடர் உரையின் முதல் பகுதி.

ஜுமுஆ சிறப்புரை @ மஸ்ஜிதுல் இஹ்ஸான், கோவை

நாள்: 06/05/15

உரை: மௌலவி. முஹம்மது இஸ்மாயில் இம்தாதி

உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்