Friday, June 19, 2015

தக்வா - நோன்பு தரும் பயிற்சி - பாகம் 1..!!

(உண்மையில், உங்கள் இறைவனிடம் அதிக கண்ணியம் வாய்ந்தவர் உங்களில் அதிக இறையச்சம் கொண்டவர்கள்தாம். அல்-குர்ஆன் (49:13))

இறைவன் தனது திருமறையில் ரமாளான் மாத நோன்பினைக் குறித்த முதல் வசனம் ஹிஜ்ரி இரண்டாம் ஆண்டு இறக்கியருளினான். அவ்வசனம் நோன்பின் மூலம் மனிதன் எதனை அடையவேண்டும் என்பதை விரிவாக இவ்வாறு கூறுகிறது.

இறைநம்பிக்கையாளர்களே! உங்களுக்கு முன் இருந்த (நபிமார்களைப் பின்பற்றிய)வர்கள் மீது கடமையாக்கப்பட்டது போல், உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டிருக்கிறது. (அதன் மூலம்) நீங்கள் இறையச்சமுள்ளவர்களாய்த் திகழக்கூடும். அல்-குர்ஆன் (2:183)

தக்வா என்ற இறையச்சம் என்பது தொழுகை, ஜகாத், ஹஜ் போன்ற வழிபாடுகளில் போன்றவற்றில் மட்டுமல்லாமல் மனிதனின் அத்துனை வாழ்வியல் நடவடிக்கையுடன் சம்பந்தப்பட்ட ஒன்று என்பதை திருமறையின் சூரா அல்-அன்ஆமில் 151 முதல் 153 வசனங்கள் மூலம் இறைவன் இறையச்சமுள்ளவர்களுக்கு வழங்கியுள்ள நிபந்தனைகள் குறித்து கூறுவதன் மூலம் விளங்கமுடியும்.

ஓர் மனிதனை தவாறான பாதையில் இருந்து நேரிய நல்வழியில் உறுதியுடன் நிலைபெற வைப்பதே அவனது தக்வா என்ற இறையச்சத்தின் அடையாளம்.

தக்வவினைக் குறித்தும் நோன்பின் மூலம் அந்த தக்வாவினை அடைவதைக் குறித்து தெளிவுபடுத்தும் 2015-ஆம் ஆண்டின் ரமளானின் முதல் ஜுமுஆவில் நிகழ்த்தப்பட்ட தொடர் ஜுமுஆ உரையின் முதல் பகுதி.

ஜுமுஆ சிறப்புரை @ மஸ்ஜிதுல் இஹ்ஸான், கோவை

நாள்: 06/19/15

உரை: மௌலவி. முஹம்மது இஸ்மாயில் இம்தாதி

உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்


No comments:

Post a Comment