Friday, May 29, 2015

செயல்களில் நயவஞ்சகத்தனம் - பாகம் 2.!!


ஓர் முஸ்லிம் நிஃபாக் என்ற நயவஞ்சகத்திலிருந்து விலகியவானாக இருக்கவேண்டும் என்பதையும் நயவஞ்சகத்தின் மூன்று விதமான வெளிப்பாடுகள் குறித்தும் கடந்தவாரம் சொல்லப்பட்டதன் தொடர்ச்சியாக...

இறைவன் தன் திருமறையில் ஓர் முஸ்லிமின் கடமையாகக் குறிப்பிடுவது..

இனி மனித இனத்தைச் சீர்படுத்துவதற்காக தோற்றுவிக்கப்பட்டிருக்கும் மிகச் சிறந்த சமூகத்தவராய் நீங்கள் இருக்கிறீர்கள். நீங்கள் நன்மை புரியும்படி ஏவுகின்றீர்கள்; தீமையிலிருந்து தடுக்கின்றீர்கள். மேலும் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்கின்றீர்கள். வேதம் அருளப்பட்ட இவர்களும் நம்பிக்கை கொண்டிருந்தால் அது அவர்களுக்குத்தான் நன்மை யாக இருந்திருக்கும். ஆனால் அவர்களில் சிலரே நம்பிக்கை யாளராய் இருக்கின்றனர். அவர்களில் பெரும்பாலோர் வரம்பு மீறுபவர்களாய் இருக்கின்றனர். அல்குர்ஆன் (3:110)

இன்றைய இஸ்லாமிய சமூகம் எவ்வாறு இந்த சத்திய மார்க்கத்தினை சாட்சி பகர்வதுடன் நிறுத்திக்கொள்ளாமல் அதனைக்குறித்து அறியாதவர்களுக்கு இந்த நேர்வழியின் பால் அழைப்புவிடுப்பதும் ஒவ்வோர் முஸ்லிமிற்கும் தார்மீகக் கடமை என்று தெரிந்திருந்தும் அதனக்குறித்த செயல்பாடுகளில் அலட்சியாமாக இன்றைய முஸ்லிம் சமூகம் இருப்பதும், நன்மையை ஏவி தீமைகளைக் களைவதில் உலக மக்களுக்கு முன்னுதாரணமாக திகழவேண்டிய முஸ்லிம் சமூகம் அதனக்குரித்த ஞானம் இல்லாமல் அசட்டையாக இருப்பதும் செயல்களின் நயவஞ்சகத்தனமே..



சென்றவாரம் உரையின் முடிவில் புரோட்டா குறித்த சிந்தனைய அறிந்துவருமாறு அறிவுருத்தப்பட்டதன் நோக்கம்...எவ்வாறு வெள்ளையர் ஆட்சி காலத்தில் பெரும் வரட்சி மற்றும் பட்டினியை போக்க எந்தவித ஊட்டச்சத்தும் இல்லாத குப்பையாக கொட்டப்பட்ட மைதா மாவை உணவாக உன்ன ஆரம்பித்தார்களோ, ஆனால் இன்று பட்டினி என்ற ஒன்று இல்லாமல்ப்போன காலத்திலும் இன்னமும் புரோட்டாவை நம்முடைய அன்றாட உணவில் முக்கியமான ஒன்றாக இன்னமும் வைத்திருக்கிறோமோ, அதனைப்போலவே இஸ்லாமிய கயிற்றில் அதனுடைய மாண்புகள் என்பது இழைகளாக இருக்கிறது.

இன்று முஸ்லிம் சமூகத்தில் ஒவ்வோர் இஸ்லாமிய இழைகளாக அறுந்து வரும் சூழலில், அனைவரும் மீதமுள்ள இழைகளை இருக்க பற்றிப்பிடித்துக் கொண்டிருக்கின்றோமே தவிர அருந்துபோன மாண்புகளை திரும்ப இஸ்லாம் என்ற கயிற்றில் பிணைக்கத் தவறியதும் செயல்களின் நயவஞ்சகத்தனமே என்பதனை விளக்கும் ஜூமுஆ சிறப்புரையின் இரண்டாம் பகுதி.

ஜுமுஆ சிறப்புரை @ மஸ்ஜிதுல் இஹ்ஸான், கோவை

நாள்: 05/29/15

உரை: மௌலவி. முஹம்மது இஸ்மாயில் இம்தாதி

உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்

http://yourlisten.com/jihkovai/052915-part-2

Friday, May 22, 2015

செயல்களில் நயவஞ்சகத்தனம் -பாகம் 1..!!




ஓர் மனிதன் முஸ்லிமாக வாழ முர்ப்படும்போது அவனது கொள்கையும் செயல்களும் இறைவனின் திருப்பொருத்தத்தை பெறுவதற்கே அமையவேண்டும்.

ஓர் முஸ்லிம் நிஃபாக் என்ற நயவஞ்சகத்திலிருந்து விலகியவானாக இருக்கவேண்டும்.



நயவஞ்சகத்தனம் இரண்டு வகைப்படுத்தப்படுகிறது, ஒன்று கொள்கை நயவஞ்சகத்தனம் மற்றொன்று செயல்களின் நயவஞ்சகத்தனம்.

ஓர் முஸ்லிம் தனது செயல்களின் பலன்களை மறுமையில் பெற அவனைது செயல்கள் அவன் கொண்ட கொள்கைக்கு சான்று பகரக்கூடியதாய் அமையவேண்டும். அப்படி மனிதனின் செயல்பாடுகளை அலசி அவைகளிலுள்ள நயவஞ்சகத்தனத்தை விளங்கி அந்தச்செயல்களிலிருந்து விலகக்கூடியவர்களை, நம்மை நாமே சுயஆய்வு செய்ய உதவும் தொடர் ஜூமுஆ சிறப்புரைகளின் முதல் பகுதி.

ஜுமுஆ சிறப்புரை @ மஸ்ஜிதுல் இஹ்ஸான், கோவை

நாள்: 05/22/15

உரை: மௌலவி. முஹம்மது இஸ்மாயில் இம்தாதி


உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்

Friday, May 15, 2015

மாணவர் தற்கொலைகளும் அதன் தீர்வும்..!!





+2 வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டும் மற்றும் 10-ஆம் முடிவுகள் விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், சமீக காலங்களில் தேர்வில் தோல்வி மற்றும் தான் குறைந்த மதிப்பெண் பெற்ற காரணத்தினால் தங்களது உயிரை மாய்த்துக்கொள்ளும்
மாணவ-மாணவியரின் எண்ணிக்கை வருடாவருடம் கூடிக்கொண்டேபோகிறது.




மாணவ-மாணவியரின் தற்கொலைகளுக்கு மூலக்காரனிகளாக தற்கால பயனில்லாக் கல்வி முறை, தனியார் ஆதிக்கம், கல்வியிலும் நுகர்வியல் கலாச்சாரம், பெற்றோர்களின் அழுத்தம், ஊடகங்களின் தேவைக்கதிகமான விளம்பரம் என்று அடுக்கிக்கொண்டே போகலாம்.


தற்காலச்சூழலில் முஸ்லிம்களாய் மற்றும் பெற்றோர்களாய் நாம் குழந்தைகளின் நலனிலும் அவர்களது கல்வியிலும் எவ்வாறு பங்களிப்பினை தரவேண்டும் என்பதை விளக்கும் ஜூமுஆ சிறப்புரை.

ஜுமுஆ சிறப்புரை @ மஸ்ஜிதுல் இஹ்ஸான், கோவை

நாள்: 05/15/15

உரை: மௌலவி. முஹம்மது இஸ்மாயில் இம்தாதி

உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்


Saturday, May 9, 2015

மரணம் - வாழ்வின் மௌன உபதேசி..!!




நபி (ஸல்) அவர்கள் ஓர்நாள் தனது தோழர்களுடன் அமர்ந்துகொண்டிருக்கும்போது இரும்பு துருப்பிடிப்பதைப்போல மனிதனின் இதயம் துருப்பிடிக்கின்றது என்று கூறினார்கள். அதற்க்கு நபித்தோழர்கள் வினவினார்கள் அப்படியானால் அந்த துருவை நீக்குவதற்கான மருந்து எது? என்று. அப்போது நபி (ஸல்) அவர்கள் இதயத்தில் ஏற்ப்படும் துருவை நீக்க இரண்டு வழிகள் இருக்கின்றது, ஒன்று மரணத்தை குறித்த சிந்தனையை எப்போதும் மேற்கொள்வது இன்னொன்று திருக்குர்ஆனை அதிகமாக ஓதுவது என்று கூறினார்கள்.

மனிதன் தனது வாழ்நாளில் பெரும்பாலும் தன் மனோயிச்சைக்குப்பின் சென்று உலகியல் வளங்களுக்காக தனது வாழ்வின் பெரும்பகுதியை செலவழித்துக்கொண்டிருக்கிறான். ஆனால், அவனது வாழ்வின் முடிவும் அதனைத்தொடர்ந்து வரவுள்ள மறுமைப் பயணத்திற்கான ஏற்ப்பாட்டினக்குறித்து அலட்சியாமாக இருக்கிறான்.

இன்று மனித சமுதாயத்தில் மது, விபச்சாரம், பொய், பித்தலாட்டம், கொலை, கொள்ளை, பாலியல் குற்றங்கள் என எல்லா சீர்கேடும் மலிந்து காணப்படுவதன் முக்கிய காரணம் மரணத்தை குறித்தும், மறுமையைக் குறித்தும், மன்னரை வாழ்வினைக் குறித்த சிந்தனையை மறந்ததன் விளைவே என்பதை விளக்கும் ஜூமுஆ சிறப்புரை.

ஜுமுஆ சிறப்புரை @ மஸ்ஜிதுல் இஹ்ஸான், கோவை

நாள்: 05/08/15

உரை: மௌலவி. முஹம்மது இஸ்மாயில் இம்தாதி


உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்

Friday, May 1, 2015

உழைப்பும் இறைவழிபாடும்..!!

திருக்குர்ஆனின் 62-ம் அத்தியாயம் சூரா அல்-ஜூமுஆவின்
9 முதல் 11 வசனங்கள் இந்த வாழ்வில் மனித இறைவனை வழிபடுவதற்கும் மற்றும் உலக வளங்களை பெற்று அனுபவிப்பதற்கும் சமநிலை பேணுவதைக்குறித்து கூறுகிறது.





يٰۤاَيُّهَا الَّذِيۡنَ اٰمَنُوۡۤا اِذَا نُوۡدِىَ لِلصَّلٰوةِ مِنۡ يَّوۡمِ الۡجُمُعَةِ فَاسۡعَوۡا اِلٰى ذِكۡرِ اللّٰهِ وَذَرُوا الۡبَيۡعَ ؕ ذٰ لِكُمۡ خَيۡرٌ لَّـكُمۡ اِنۡ كُنۡتُمۡ تَعۡلَمُوۡنَ ﴿62:9﴾
فَاِذَا قُضِيَتِ الصَّلٰوةُ فَانْتَشِرُوۡا فِى الۡاَرۡضِ وَابۡتَغُوۡا مِنۡ فَضۡلِ اللّٰهِ وَاذۡكُرُوا اللّٰهَ كَثِيۡرًا لَّعَلَّكُمۡ تُفۡلِحُوۡنَ ﴿62:10﴾
وَاِذَا رَاَوۡا تِجَارَةً اَوۡ لَهۡوَا۟ اۨنْفَضُّوۡۤا اِلَيۡهَا وَتَرَكُوۡكَ قَآٮِٕمًا ؕ قُلۡ مَا عِنۡدَ اللّٰهِ خَيۡرٌ مِّنَ اللَّهۡوِ وَمِنَ التِّجَارَةِ ؕ وَاللّٰهُ خَيۡرُ الرّٰزِقِيۡنَ ﴿62:11﴾

62:9 இறைநம்பிக்கை கொண்டவர்களே! வெள்ளிக்கிழமையன்று தொழுகைக்காக அழைக்கப்படும்போது அல்லாஹ்வை நினைவுகூர்வதன் பக்கம் விரைந்து செல்லுங்கள். கொடுக்கல் வாங்கலை விட்டுவிடுங்கள். இது உங்களுக்கு மிகச் சிறந்ததாகும் நீங்கள் அறிந்தவர்களாக இருந்தால்!

62:10 பின்னர் தொழுகை நிறைவேற்றப்பட்டுவிட்டால் பூமியில் பரவிச்செல்லுங்கள்; அல்லாஹ்வின் அருளைத் தேடுங்கள்! மேலும் அல்லாஹ்வை அதிகமாக நினைவுகூர்ந்த வண்ணம் இருங்கள். உங்களுக்கு வெற்றி கிடைக்கக்கூடும்.

62:11 அவர்கள் வியாபாரத்தையோ விளையாட்டு வேடிக்கை நடைபெறுவதையோ பார்த்தபோது அவற்றின் பக்கம் பாய்ந்து சென்றுவிட்டார்கள். மேலும் உம்மை நின்ற நிலையில் விட்டுவிட்டார்கள். (அவர்களிடம்) கூறும்: அல்லாஹ்விடம் இருப்பவை விளையாட்டு, வேடிக்கை மற்றும் வியாபாரத்தைவிடச் சிறந்தவையாகும். மேலும் அல்லாஹ் அனைவரைவிடவும் சிறந்த வாழ்வாதாரம் வழங்குபவனாக இருக்கின்றான்.

மனிதன் தன் வாழ்வில் இறைவனின் நினைவுகூருதல் என்ற வணக்கவழிபாடுகளுடன் தன் வளங்களை பெருக்கிக்கொள்ளவும் உழைப்பை மேற்கொள்ளவேண்டும் என்று இறைவன் நமக்கு கட்டளையிடுவதை பார்க்கலாம்.

ஆனால், இன்றைய சமுதாயமோ இந்த இரண்டில் எதாவது ஒன்றை மட்டுமே நேசித்து அதில் தீவிரப்போக்கும் இன்னொன்றின்பால் அலட்சியப்போக்கை மேற்கொள்வதை நாம் பார்க்கலாம்.

ஓர் முஸ்லிம் இறைவன் காட்டிய நெறியின்படி உழைத்து அதன் மூலம் பெரும் வழங்களை அனுபவிப்பது மட்டுமின்றி, இறைவனது மார்கத்தை நிலைநாட்ட தன்னுடைய உழைப்பையும் வணிகத்தையும் ஓர் கருவியாக பயன்படுத்தி அடுத்தவர்களுக்கு ஓர் முன்மாதிரியாய் திகழவேண்டும்.

உழைப்பவர்களுக்கு என்றுமே உழைப்பாளர் தினம் தான்...!

இஸ்லாமிய பார்வையில் உழைப்பைக் குறித்தும், உழைப்பாளர்கள் குறித்துமான ஜுமுஆ சிறப்புரை.

ஜுமுஆ சிறப்புரை @ மஸ்ஜிதுல் இஹ்ஸான், கோவை

நாள்: 05/01/15

உரை: மௌலவி. முஹம்மது இஸ்மாயில் இம்தாதி

உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்