Friday, May 1, 2015

உழைப்பும் இறைவழிபாடும்..!!

திருக்குர்ஆனின் 62-ம் அத்தியாயம் சூரா அல்-ஜூமுஆவின்
9 முதல் 11 வசனங்கள் இந்த வாழ்வில் மனித இறைவனை வழிபடுவதற்கும் மற்றும் உலக வளங்களை பெற்று அனுபவிப்பதற்கும் சமநிலை பேணுவதைக்குறித்து கூறுகிறது.





يٰۤاَيُّهَا الَّذِيۡنَ اٰمَنُوۡۤا اِذَا نُوۡدِىَ لِلصَّلٰوةِ مِنۡ يَّوۡمِ الۡجُمُعَةِ فَاسۡعَوۡا اِلٰى ذِكۡرِ اللّٰهِ وَذَرُوا الۡبَيۡعَ ؕ ذٰ لِكُمۡ خَيۡرٌ لَّـكُمۡ اِنۡ كُنۡتُمۡ تَعۡلَمُوۡنَ ﴿62:9﴾
فَاِذَا قُضِيَتِ الصَّلٰوةُ فَانْتَشِرُوۡا فِى الۡاَرۡضِ وَابۡتَغُوۡا مِنۡ فَضۡلِ اللّٰهِ وَاذۡكُرُوا اللّٰهَ كَثِيۡرًا لَّعَلَّكُمۡ تُفۡلِحُوۡنَ ﴿62:10﴾
وَاِذَا رَاَوۡا تِجَارَةً اَوۡ لَهۡوَا۟ اۨنْفَضُّوۡۤا اِلَيۡهَا وَتَرَكُوۡكَ قَآٮِٕمًا ؕ قُلۡ مَا عِنۡدَ اللّٰهِ خَيۡرٌ مِّنَ اللَّهۡوِ وَمِنَ التِّجَارَةِ ؕ وَاللّٰهُ خَيۡرُ الرّٰزِقِيۡنَ ﴿62:11﴾

62:9 இறைநம்பிக்கை கொண்டவர்களே! வெள்ளிக்கிழமையன்று தொழுகைக்காக அழைக்கப்படும்போது அல்லாஹ்வை நினைவுகூர்வதன் பக்கம் விரைந்து செல்லுங்கள். கொடுக்கல் வாங்கலை விட்டுவிடுங்கள். இது உங்களுக்கு மிகச் சிறந்ததாகும் நீங்கள் அறிந்தவர்களாக இருந்தால்!

62:10 பின்னர் தொழுகை நிறைவேற்றப்பட்டுவிட்டால் பூமியில் பரவிச்செல்லுங்கள்; அல்லாஹ்வின் அருளைத் தேடுங்கள்! மேலும் அல்லாஹ்வை அதிகமாக நினைவுகூர்ந்த வண்ணம் இருங்கள். உங்களுக்கு வெற்றி கிடைக்கக்கூடும்.

62:11 அவர்கள் வியாபாரத்தையோ விளையாட்டு வேடிக்கை நடைபெறுவதையோ பார்த்தபோது அவற்றின் பக்கம் பாய்ந்து சென்றுவிட்டார்கள். மேலும் உம்மை நின்ற நிலையில் விட்டுவிட்டார்கள். (அவர்களிடம்) கூறும்: அல்லாஹ்விடம் இருப்பவை விளையாட்டு, வேடிக்கை மற்றும் வியாபாரத்தைவிடச் சிறந்தவையாகும். மேலும் அல்லாஹ் அனைவரைவிடவும் சிறந்த வாழ்வாதாரம் வழங்குபவனாக இருக்கின்றான்.

மனிதன் தன் வாழ்வில் இறைவனின் நினைவுகூருதல் என்ற வணக்கவழிபாடுகளுடன் தன் வளங்களை பெருக்கிக்கொள்ளவும் உழைப்பை மேற்கொள்ளவேண்டும் என்று இறைவன் நமக்கு கட்டளையிடுவதை பார்க்கலாம்.

ஆனால், இன்றைய சமுதாயமோ இந்த இரண்டில் எதாவது ஒன்றை மட்டுமே நேசித்து அதில் தீவிரப்போக்கும் இன்னொன்றின்பால் அலட்சியப்போக்கை மேற்கொள்வதை நாம் பார்க்கலாம்.

ஓர் முஸ்லிம் இறைவன் காட்டிய நெறியின்படி உழைத்து அதன் மூலம் பெரும் வழங்களை அனுபவிப்பது மட்டுமின்றி, இறைவனது மார்கத்தை நிலைநாட்ட தன்னுடைய உழைப்பையும் வணிகத்தையும் ஓர் கருவியாக பயன்படுத்தி அடுத்தவர்களுக்கு ஓர் முன்மாதிரியாய் திகழவேண்டும்.

உழைப்பவர்களுக்கு என்றுமே உழைப்பாளர் தினம் தான்...!

இஸ்லாமிய பார்வையில் உழைப்பைக் குறித்தும், உழைப்பாளர்கள் குறித்துமான ஜுமுஆ சிறப்புரை.

ஜுமுஆ சிறப்புரை @ மஸ்ஜிதுல் இஹ்ஸான், கோவை

நாள்: 05/01/15

உரை: மௌலவி. முஹம்மது இஸ்மாயில் இம்தாதி

உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்

No comments:

Post a Comment