Friday, May 29, 2015

செயல்களில் நயவஞ்சகத்தனம் - பாகம் 2.!!


ஓர் முஸ்லிம் நிஃபாக் என்ற நயவஞ்சகத்திலிருந்து விலகியவானாக இருக்கவேண்டும் என்பதையும் நயவஞ்சகத்தின் மூன்று விதமான வெளிப்பாடுகள் குறித்தும் கடந்தவாரம் சொல்லப்பட்டதன் தொடர்ச்சியாக...

இறைவன் தன் திருமறையில் ஓர் முஸ்லிமின் கடமையாகக் குறிப்பிடுவது..

இனி மனித இனத்தைச் சீர்படுத்துவதற்காக தோற்றுவிக்கப்பட்டிருக்கும் மிகச் சிறந்த சமூகத்தவராய் நீங்கள் இருக்கிறீர்கள். நீங்கள் நன்மை புரியும்படி ஏவுகின்றீர்கள்; தீமையிலிருந்து தடுக்கின்றீர்கள். மேலும் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்கின்றீர்கள். வேதம் அருளப்பட்ட இவர்களும் நம்பிக்கை கொண்டிருந்தால் அது அவர்களுக்குத்தான் நன்மை யாக இருந்திருக்கும். ஆனால் அவர்களில் சிலரே நம்பிக்கை யாளராய் இருக்கின்றனர். அவர்களில் பெரும்பாலோர் வரம்பு மீறுபவர்களாய் இருக்கின்றனர். அல்குர்ஆன் (3:110)

இன்றைய இஸ்லாமிய சமூகம் எவ்வாறு இந்த சத்திய மார்க்கத்தினை சாட்சி பகர்வதுடன் நிறுத்திக்கொள்ளாமல் அதனைக்குறித்து அறியாதவர்களுக்கு இந்த நேர்வழியின் பால் அழைப்புவிடுப்பதும் ஒவ்வோர் முஸ்லிமிற்கும் தார்மீகக் கடமை என்று தெரிந்திருந்தும் அதனக்குறித்த செயல்பாடுகளில் அலட்சியாமாக இன்றைய முஸ்லிம் சமூகம் இருப்பதும், நன்மையை ஏவி தீமைகளைக் களைவதில் உலக மக்களுக்கு முன்னுதாரணமாக திகழவேண்டிய முஸ்லிம் சமூகம் அதனக்குரித்த ஞானம் இல்லாமல் அசட்டையாக இருப்பதும் செயல்களின் நயவஞ்சகத்தனமே..



சென்றவாரம் உரையின் முடிவில் புரோட்டா குறித்த சிந்தனைய அறிந்துவருமாறு அறிவுருத்தப்பட்டதன் நோக்கம்...எவ்வாறு வெள்ளையர் ஆட்சி காலத்தில் பெரும் வரட்சி மற்றும் பட்டினியை போக்க எந்தவித ஊட்டச்சத்தும் இல்லாத குப்பையாக கொட்டப்பட்ட மைதா மாவை உணவாக உன்ன ஆரம்பித்தார்களோ, ஆனால் இன்று பட்டினி என்ற ஒன்று இல்லாமல்ப்போன காலத்திலும் இன்னமும் புரோட்டாவை நம்முடைய அன்றாட உணவில் முக்கியமான ஒன்றாக இன்னமும் வைத்திருக்கிறோமோ, அதனைப்போலவே இஸ்லாமிய கயிற்றில் அதனுடைய மாண்புகள் என்பது இழைகளாக இருக்கிறது.

இன்று முஸ்லிம் சமூகத்தில் ஒவ்வோர் இஸ்லாமிய இழைகளாக அறுந்து வரும் சூழலில், அனைவரும் மீதமுள்ள இழைகளை இருக்க பற்றிப்பிடித்துக் கொண்டிருக்கின்றோமே தவிர அருந்துபோன மாண்புகளை திரும்ப இஸ்லாம் என்ற கயிற்றில் பிணைக்கத் தவறியதும் செயல்களின் நயவஞ்சகத்தனமே என்பதனை விளக்கும் ஜூமுஆ சிறப்புரையின் இரண்டாம் பகுதி.

ஜுமுஆ சிறப்புரை @ மஸ்ஜிதுல் இஹ்ஸான், கோவை

நாள்: 05/29/15

உரை: மௌலவி. முஹம்மது இஸ்மாயில் இம்தாதி

உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்

http://yourlisten.com/jihkovai/052915-part-2

No comments:

Post a Comment