Wednesday, February 8, 2017

ஹதீஸ் தொகுப்புகள்..!!



ஹதீஸ் தொகுப்புகள் முறையாக ஆரம்பிக்கப்பட்டது இரண்டாம் உமர் எனப்படும் ஹல்ரத் உமர் இப்னு அப்துல் அஸீஸ் (ரஹ்) அவர்களின் காலகட்டத்தில். இவரது காலம் ஹிஜ்ரீ 61-101 வரை. முதல் தொகுப்பை தொகுத்தவர், ரபீஃ இப்னு ஸபீஹா. இரண்டாமவர், சயித் என்பவர். ஹிஜ்ரீ 101 எனும்போது ஹிஜ்ரீ இரண்டாம் நூற்றாண்டில் ஆரம்பம்.

இந்த கால கட்டத்தில் மதீனாவில் இமாம் மாலிக் (ரஹ்), மக்காவில் இமாம் இப்னு ஜுரைஜ் (ரஹ்), சிரியாவில் இமாம் அவ்சாஈ (ரஹ்), கூஃபாவில் இமாம் சுஃப்யானுஸ் ஸவ்ரீ (ரஹ்), பஸராவில் இமாம் இப்னு தீனார் (ரஹ்), யமனில் இமாம் முஹம்மத் (ரஹ்), குறாஸானில் இமாம் இப்னு முபாரக் (ரஹ்) ஆகியோர் ஹதீஸ்களை தொகுத்தனர். இவைகளில் ஹதீசும் உண்டு, அதோடு, சஹாபாக்களின் சொற்கள், தீர்ப்புகள், தாபியீன்களின் சொற்கள் எல்லாவற்றையும் சேர்த்துதான் தொகுப்புகள் உருவாக்கப்பட்டன.

தாபியீன்களின் சொற்கள், நடவடிக்கைகளுக்கு அரபியில் ‘அசர்’ என்று பெயர். சரியாகச்சொன்னால் சுத்தமான தொகுப்புகள் என்று எதுவும் கிடையாது, இந்த கால கட்டத்திற்குப்பிறகு ‘முஸ்னத்’கள் உருவாக்கம். ஹதீஸ்களை மட்டும் தொகுக்கும் பணி ஆரம்பமானது. அதாவது, சஹாபாக்களின் அறிவிப்பு முறை வைத்து தொகுப்புகள் உருவாக்கப்பட்டன. உதாரணமாக, முதலில் அபூபக்ர் (ரலி) அவர்கள் அறிவித்தவை எல்லாம், அடுத்து உமர் (ரலி, அவர்கள் அறிவித்தவை எல்லாம், பிறகு, உஸ்மான் (ரலி அவர்கள் அறிவித்தவை எல்லாம், அதற்குப்பிறகு, அலி (ரலி) அவர்கள் அறிவித்தவை எல்லாம், இவ்வாறு சஹாபாக்களை முக்கியத்துவப்படுத்தியும், வரிசைப்படுத்தியும் உருவாக்கப்பட்ட தொகுப்பு களுக்கு முஸ்னத்கள் என்று பெயர். இவ்வகை நூல்களில் ஹதீஸ்கள், தலைப்புகளின் அடிப்படையிலும் விஷயங்களின் அடிப்படையிலும் இருக்காது.இத்தகைய காலகட்டத்தில்தான் நாற்பெரும் இமாம்களின் வருகை

இமாம் அபூ ஹனீபா (ரஹ்) 
ஹி, 80 – 150 , கி.பி 699 – 767 . 
வயது, 70 (அ) 71.
இமாம் மாலிக் (ரஹ்) 
ஹி, 95 – 179 கி.பி. 714 – 798 வயது, 84
இமாம் ஷாஃபிஈ (ரஹ்) 
ஹி, 150 – 240 கி.பி. 767 – 859 வயது, 90 (அ) 92
இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் (ரஹ்) ஹி,.164 – 241 கி.பி, 780 – 855 வயது 75 (அ) 77

அதாவது, இவர்களுடைய ஆய்வுக்கு கிடைத்த ஹதீஸ்கள் எல்லாம் முறையான ஹதீஸ் தொகுப்புகள் உருவாகுவதற்கு முன்னர்தான். இதற்கு அடுத்த காலகட்டத்தில்தான் இன்று நம்மிடையே உள்ள அதிகாரபூர்வமான ஹதீஸ் தொகுப்புகளான புகாரீ, முஸ்லிம், அபூதாவூத், திர்மிதீ, நஸஈ, இப்னு மாஜா ஆகிய ஆறு தொகுப்புகளின் உருவாக்கம் தொடங்கி முடிவடைகிறது. இவற்றில் முதல் இரண்டுக்கு மட்டுமே ‘ஸஹீஹ்’ எனப்படும். அதாவது, ஆதாரபூர்வமான ஹதீஸ் தொகுப்பு என்று பொருள். இரண்டுக்கும் சேர்த்து ‘ஸஹீஹைன்’ எனப்படும். இவை இரண்டு தவிர மற்ற நான்கு தொகுப்புகளுக்கு ஸுனன் எனப்படும். ஸுனன் என்றால் சுன்னத் என்பதன் பன்மை. அதாவது,ஸுனன் அபூ தாவூத்,ஸுனன் திர்மிதீ,ஸுனன் நஸஈ,ஸுனன் இப்னு மாஜா. இந்த நான்கின் தகுதி என்னவென்றால், இவைகளில் சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட ஹதீஸ்களில் இரண்டாம் நிலையில் உள்ளவையும் உண்டு. எனினும் இவை ஆறுக்கும் சேர்த்து ‘ஸிஹாஹுஸ் ஸித்தா’ என்றே பெயர் வழங்கப்படுகிறது. ஆனாலும் முதல் இரண்டின் இடத்தை இந்த நான்கு நூல்களால் பெற முடியவில்லை.

இமாம் புகாரி (ரஹ்) அவர்களின் காலம் ஹிஜ்ரீ 194 – 256 இமாம் முஸ்லிம் (ரஹ்) அவர்களின் காலம் ஹிஜ்ரீ 202 – 261 இதனால்தான் நான்கு இமாம்களும் இவ்வாறு வாக்கு மூலம் தந்துள்ளார்கள் : ”எங்களுக்கு கிடைத்துள்ள ஹதீஸ்களின் அடிப்படையில், எங்களால் முடிந்த அளவுக்கு ஆய்வுகள் செய்துள்ளோம்; எங்கள் கருத்துக்கள் ஆதரப்பூர்வமான ஹதீசுக்கு மாற்றமாக இருந்தால் எங்கள் கருத்தை குப்பையில் தூக்கி எறிந்து விட்டு ஹதீஸை பின்பற்றுங்கள்.” இமாம் ஷாஃபிஈ அவர்கள், மாலிக் இமாமின் ‘முஅத்தா’ எனும் ஹதீஸ் தொகுப்பு பற்றி இவ்வாறு ஒரு அறிக்கை தருகின்றார்: ”வானத்தின் கீழ் இருக்கும் நூல்களிலேயே மாலிக் இமாமின் ‘முஅத்தா’ போன்றதொரு நூலை நான் கண்டதே இல்லை.”

ஆனால்,மாலிக் இமாமின் முஅத்தா எனும் நூல் ‘ஸிஹாஹுச்சித்தா’ எனும் ஆதார பூர்வமான ஆறு கிரந்தங்களில் இடம் பெறவில்லை. இதிலிருந்து தெரிய வருவதென்னவென்றால் இமாம் ஷாஃபிஈ உட்பட நான்கு இமாம்களுக்கும் பிறகுதான் முறையான ஹதீஸ் தொகுப்புகள் உருவாகி இருக்கின்றன எனும்போது அவர்கள் நால்வரும் ஆதாரபூர்வமான ஹதீஸ்களின் அடிப்படையில்தான் ஆய்வு செய்தார்கள் என்று கூற முடியாது என்பதுதான்.

என்ன செய்யப் போகிறோம் நாம்..?




முஸ்லிம்கள் தங்கள் அடையாளங்களை துறக்க வேண்டும் என்பது போன்ற வெளிப்புற நிர்ப்பந்தங்களுக்கு எதிராக ரோசம் கொண்டு, போராட்ட குணத்தை நாம் வெளிப்படுத்துகிறோம். ( உதாரணம்: ஹிஜாப்,முகத்திரை, ஹலால் உணவு மற்றும் இன்ன பிற.)

இது போன்ற நிர்ப்பந்தமான சூழல்களில் , நமது இஸ்லாமிய மரபை பேணாததற்காக இறைவன் நம்மை குற்றம் பிடிக்க போவதில்லை. ஏனென்றால் அவை நிர்பந்தம் காரணமாக செய்யபடுகிற குற்றங்கள்.!
(உதாரணம்: நிர்பந்த குப்ர் )

ஆனால் எவ்வித புறத் தடைகளோ, நிர்ப்பந்தங்களோ இல்லாமேலேயே,
பல்வேறு இஸ்லாமிய சட்டங்களை நாமே சுயமாக புறக்கணித்துக் கொண்டு இருக்கிறோமே.!

இதற்காக நாம் மறுமையில் கண்டிப்பாக பதில் சொல்லியாக வேண்டுமே!
(உதாரணம்: திருமண நடைமுறைகள், வாரிசுரிமை சட்டங்கள், இன்னும் பல..)
இறைவன் மறுமையில் நம்மையெல்லாம் கண்டிப்பாக விசாரிப்பான். அப்படிப்பட்ட விவகாரங்களில் உலகில் நீங்கள் என்ன செய்து கொண்டு இருந்தீர்கள்?

எதைக் கடைப்பிடித்தீர்கள்?

இஸ்லாமிய மரபுகளை நடைமுறைப்படுத்த என்ன முயற்சி எடுத்தீர்கள் என கேட்பான்.! அப்படிப்பட்ட விவகாரங்களில் , நாம் எவ்வித அக்கறையும் கவலையும் இல்லாமல் காலத்தை கழிக்கிறோம். சட்டத்தை நாமே மீறுகிற போது நமது இஸ்லாமிய உணர்வும் ரோஷமும் ஏன் மழுங்கிப் போகிறது.?

குற்றங்களை மற்றவர் செய்தால் தான் தவறு. அதே குற்றத்தை , அல்லது அதை விட பெரியதை நாமே செய்கிற போது அது தவறில்லை என நினைப்பது பனு இஸ்ரவேலத்தனமல்லவா.? இப்படிப்பட்ட மனநிலையின் காரணமாகத்தான் அவர்கள் இறைவனால் இழிவடைய செய்யப்பட்டார்கள்
சிந்திக்க வேண்டிய, ஒவ்வொருவரும் சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டிய விஷயம் அல்லவா இது.?


என்ன செய்யப் போகிறோம் நாம்..?

இஸ்லாமிய கொள்கை நம்மிடம் எதிர்பார்ப்பது என்ன.?




கேரளா மாநிலம் கொழிஞ்சாம்பாறையில் டிசம்பர் 11, 2016 அன்று நடைபெற்ற “இஸ்லாம் ஓர் நடுநிலை மார்க்கம்” எனும் தலைப்பில் பாலக்காடு மாவட்ட மாநாட்டின் துவக்க விழாவில் மௌலவி. முஹம்மது இஸ்மாயில் இம்தாதி அவர்கள் மேலுள்ள தலைப்பில் நிகழ்த்திய உரை.


இந்த உரையை YouTube-ல் காண மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்









பரிகாசிப்பதும் தீமையே..!!




மனிதன் தனது நண்பர்கள் அல்லது நெருங்கிய உறவினர்கள் மத்தியில் இருக்கும்பொழுது அவர்களைக் கவருவதற்காக பல நபர்களை வேடிக்கைக்காக அவர்களது அங்க அசைவுகள், பேச்சு, நடை, உடை, பாவனை போன்றவற்றை பரிகாசிப்பதும் அதனைக்கொண்டு மற்றவர்கள் மத்தியில் தன்னை உயர்ந்தவன் என காட்டிக்கொள்வதும் அம்மனிதனின் இம்மை-மறுமை இரண்டையும் பாதிக்கக்கூடிய ஒன்றாகும்.

அவ்வாறு பரிகாசம் செய்பர்வர்களின் கைசேத நிலையினையும், இந்த பழக்கம் இஸ்லாமிய நற்பண்புகளுக்கு முரணான செயல் என்பதையும் விளக்கிடும் ஜுமுஆ சிறப்புரை.

ஜுமுஅ சிறப்புரை @ மஸ்ஜிதுல் இஹ்ஸான், கோவை

நாள்: பிப்ரவரி 3, 2017

உரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி

இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்