Friday, July 24, 2015

2050-ல் மேலோங்கப்போவது இஸ்லாமே..!!


சென்ற வாரம் விஷ்வ ஹிந்து பரிஷத்தின் தலைவர், அசோக் சிங்கால் 2020-ஆம் ஆண்டு இந்தியா முழுமையான ஹிந்து நாடாகும் என்றும், 2050-ஆம் ஆண்டு உலகமே ஹிந்து பெரும்பான்மையாகும் என்ற ஓர் வன்மம் நிறைந்த நச்சுக்கருத்தினை தெரிவித்தார்.



உண்மையில், இஸ்லாமியப் பார்வையில் மற்றும் பல்வேரும் ஆராய்ச்சிகள் மற்றும் புள்ளியியல் தகவல்களின்படி உலகில் வேகாமாக வளர்ந்தும் மிக அதிகமாக கொள்கை உறுதிகொண்ட மக்களை கொண்ட ஒரே மார்க்கம் இஸ்லாம் மட்டுமே என்பதை நாம் அறியலாம்.



நபி (ஸல்) அறிவித்ததைப் போன்றும் இறைவன் தன் திருமறையில் கூறும்போதும் எவ்வாறு முஸ்லிம்கள் ஒற்றுமையுடன் செயல்படுவதன் மூலமும் இஸ்லாமிய சமூகம் எப்படி இந்த உலகத்தில் புறக்கணிக்க முடியாத சக்தியாக உருவெடுக்கும் என்பதை விளக்கும் ஜூமுஆ சிறப்புரை.

ஜுமுஆ சிறப்புரை @ மஸ்ஜிதுல் இஹ்ஸான், கோவை

நாள்: ஜூலை 24, 2015

உரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி


இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்

Saturday, July 18, 2015

ஈகைப் பெருநாள் சிறப்புரை-2015..!!

கோவை மாநகர ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த், மஸ்ஜிதுல் இஹ்ஸான், மற்றும் மஸ்ஜிதுல் ஹுதா இனைந்து கரும்புக்கடையிலுள்ள இஸ்லாமியா மெட்ரிக்குலேஷன் பள்ளி மைதானத்தில் இந்த வருட (2015) ஈதுல் ஃபித்ர் தொழுகைக்கு சிறப்பாக நடைபெற்றது.



ஈதுத் தொழுகைக்குப்பின் மஸ்ஜிதுல் இஹ்ஸானின் இமாம் மற்றும் ஹிதாயா மகளிர் இஸ்லாமியக் கல்லூரியின் தாளலருமான மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார்.


நாள்: ஜூலை 18, 2015

உரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி

இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்

http://yourlisten.com/jihkovai/JmOGI4MD

இபாதத்தும் இறைக்கருணையும்..!!



இறைவன் மனிதவாழ்வின் அத்துனை பாகங்களையும் இணைத்து தனது தீன் என்ற வாழ்வியல் முறையை தனது இறுதி வேதமான திருக்குர்ஆனில் உபதேசித்துள்ளான்.

இறைவன் வழங்கியுள்ள வாழ்வியல் கட்டளைகள் நமது வழிபாடுகளில் மட்டுமல்லாது நமது வாழ்வியலின் அத்துனை அம்சங்களையும் செம்மைப்படுத்தி ஒழுக்கவிளுமியங்களின் சிகரத்தில் இறைநம்பிக்கையாளனை மாற்றுவதே இபாதத் என்ற இறைவனுக்குக் கட்டுப்படும் மனப்பான்மையாகும்.

மனிதன் எதனை இபாதத் என்று கருதி தன் வாழ்நாள் முழுவதும் செயல்பட்டுவருகிறானோ அதனை விடவும் இறுதித்தீர்ப்பு நாளில் இறைவனது உயர்ந்த கருணையால் மட்டுமே அவன் சொர்க்கம் புக முடியும் என்பதையும், நமது ரமளான் மாத இபாதத்துகளை முழுவதும் சீர்குலைக்கும் விதாமாக நமது நடவடிக்கை அமையக்கூடாது என்பதனையும், இறைவனின் கருணை வேண்டியும் நமது இபாதத்துகளை அவன் கருணை கொண்டு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதில் நாம் முழு முனைப்பு காட்டவேண்டும் என்பதையும் விளக்கும் ஜூமுஆ சிறப்புரை.

ஜுமுஆ சிறப்புரை @ மஸ்ஜிதுல் இஹ்ஸான், கோவை

நாள்: ஜூலை 17, 2015

உரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி


இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்


Sunday, July 12, 2015

சமநிலை (தவறிய) சமுதாயம்..!!

கோவை மஸ்ஜிதுல் இஹ்ஸானில் இந்த வருட (2015) ரமளானின் 25-ஆம் நாள் இரவு தொழுகைக்குப் பின் நிகழ்த்தப்பட்ட சிற்றுரை.




இஸ்லாம் வரையறுக்கும் மற்றும் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கட்டமைத்த முஸ்லிம் சமூகம் சமநிலை மேலோங்கியதாகவும் உண்மைக்கு சான்று பகரக்கூடிய உன்னத சமூகமாக திகழ்ந்தது.

இன்றைய முஸ்லிம் சமூகம் இஸ்லாம் கூறும் சமநிலப்பாட்டை விட்டு இரு பெரும் தீவிரப்போக்கில் சிக்கித்தவிக்கும் சூழல் நிலவுகிறது. இஸ்லாமிய மார்க்கம் கூறும் அந்த சமநிலை தன்மை குறித்தும், முஸ்லிம்கள் எவ்வாறு தங்களது பார்வைகளையும் சிந்தனைகளையும் இந்த தன்மையின்பக்கம் சீர்படுத்தி உலக மக்கள் அனைவருக்கும் இந்த இஸ்லாமிய வாழ்வியலின் சான்றுகளாக விளங்கவேண்டிய கட்டாயத்தை விளக்கும் சிறப்புரை.

தலைப்பு: ரமளானின் அருள் வளங்கள் யாருக்கு?

நாள்: ஜூலை 12, 2015 (25)

உரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி


இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்

http://yourlisten.com/jihkovai/I0M2I5MT


Friday, July 10, 2015

நமக்கும் குர்ஆனுக்கும் இடையிலான தொடர்பு எப்படி இருக்கிறது..?

ரமளான் மாதம் நம்மை வெகுவேகமாக கடந்து சென்றுகொண்டிருக்கும் இந்த தருணத்தில், இந்த மாதம் எதனால் புனிதப்படுத்தப்பட்டது என்பதை இறைவன் தனது திருமறையில் கூறும்போது குர்ஆன் இறக்கியருளப்பட்டதனாலேயே இந்த மாதத்திற்கு சிறப்பு என்று கூறுவதன் மூலம் ரமளான் மாத நோன்பிற்கு மூல காரணியாக குர்ஆன் விளங்குகிறது என்பது விளங்குகிறது.



முஸ்லிம் என்று நம்மை அடையாளப்படுத்திக்கொள்ளும் நாம், நமக்கும் குர்ஆனுக்கும் இடையிலான தொடர்பு எப்படி இருக்கிறது என்பதை சற்றே சீர்தூக்கிப்பார்க்கவேண்டிய தருணமிது.

இறைவன் வழங்கிய வாழ்வியல் நெறியான இஸ்லாத்தின் கொள்கை நெறிகளையும் இறை கட்டளைகளையும் தாங்கிய குர்ஆனை நாம் எவ்வாறு விளங்கிக்கொண்டு நமது வாழ்வில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதை விளக்கும் ஜூமுஆ சிறப்புரை.

ஜுமுஆ சிறப்புரை @ மஸ்ஜிதுல் இஹ்ஸான், கோவை

நாள்: ஜூலை 10, 2015

உரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி

இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்

Saturday, July 4, 2015

இஸ்லாம் கூறும் பாவமன்னிப்பு..!!



சென்ற வாரம் இறையச்சத்தின் வாயிலாக தௌபா என்ற உளப்பூர்வமாக இறைவனிடம் பிழைபொறுக்க வேண்டுதல் என்பதன் மூலம் மனிதன் எவ்வாறு தனது கடந்த கால வாழ்வில் தான் செய்த அனைத்து பாவங்களை விட்டும் மீண்டு உளப்பூர்வமாக பாவமன்னிப்பு தேடும்போது, அவனது வாழ்வே மீண்டும் பிறந்த குழந்தையை போன்று அப்பழுக்கற்ற நிலையை அடைகிறது என்பதனைக் குறித்து தெரிந்துகொண்டோம்.

சென்ற வாரத்தின் தொடர்ச்சியாக, ஓர் இறைநம்பிக்கை கொண்ட அடியான் இறைவனிடம் எவ்வாறு தனது பாவங்களுக்கு மன்னிப்பு கோரவேண்டும் என்பதனைக் குறித்தும். இஸ்லாமிய பாவமன்னிப்பு கோட்பாடு எவ்வாறு மற்ற எல்லா மதங்களின் கோட்பாடுகளிலிருந்தும் தனித்தன்மை பெறுகிறது. இந்தக் கோட்பாடு வெறும் சித்தாந்த ரீதியில் இல்லாமல் அறிவுபூர்வமான ஒன்றாகவும் அமைந்துள்ளது என்பதனை விளக்கும் 2015-ஆம் ஆண்டின் ரமளானின் மூன்றாம் ஜுமுஆ சிறப்புரையின் தொடரின் மூன்றாம் பகுதி.

ஜுமுஆ சிறப்புரை @ மஸ்ஜிதுல் இஹ்ஸான், கோவை

நாள்: 07/03/15

உரை: மௌலவி. முஹம்மது இஸ்மாயில் இம்தாதி

உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்