Friday, April 24, 2015

வாழ்க்கை ஓட்டம் எதனை நோக்கி..!!



இன்றைய மனிதன் தன் வாழ்க்கையினை தன் பொருளாதாரத்தை பெருக்குவதற்கும் சில உலககியல் நோக்கத்தை அடைவதர்க்காகவுமே அவனது வாழ்நாளை கடைசிவரை கழித்தும் உலகில் இறைவன் மனிதன் அனுபவிக்க வேண்டி படைத்த இயற்க்கை அழகினை ரசிப்பதற்கும் அதன் பயனையும் பெறுவதர்க்கும் முயற்சிப்பதில்லை.

மனிதன் தனது வாழ்வை இறைவன் வழங்கிய நெறியில் அவனது வழிமுறையில் அமைத்துக்கொள்ளும்போது நமது வாழ்க்கையில் என்ன துயரங்கள் நேர்ந்தாலும், அளவுக்கு அதிகமாக இன்பம் வந்தாலும் ஓர் முஃமீன் இறைவனின் பால் திரும்பும்போது அவனது செயல்கள் அவனுக்கு நன்மையே பெற்றுத்தருகிறது என்பதை விளக்கும் ஜூமுஆ சிறப்புரை.

ஜுமுஆ சிறப்புரை @ மஸ்ஜிதுல் இஹ்ஸான், கோவை

நாள்: 04/24/15

உரை: மௌலவி. முஹம்மது இஸ்மாயில் இம்தாதி

உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்

Friday, April 17, 2015

இஸ்லாமியப் பார்வையில் மனித உயிர்கள்..!!

இன்றைய சூழலில் பல்வேறு வகையிலும் மனித உரைகள் அளிக்கப்பட்டுவரும் நிலையில். உ.பி-யில் 5 முஸ்லிம்கள் குற்றம் நிரூபிக்கப்படாத நிலையில் போலி எண்கவுண்டர் கொலைகள்..! இந்தப் படுகொலையை எந்த அரசியல் கட்சியும் , மீடியாவும், விவாத அரங்குகளும் கண்டுகொள்ளவில்லை, கண்டிக்க துணிச்சலும் இல்லை, அதற்க்கு காரணம் அவர்கள் முஸ்லிம்கள்..!



மனித உயிர்களுக்கு இஸ்லாம் அளிக்கும் முக்கியத்துவம் மற்றும் அது இந்து, முஸ்லிம், கிறித்தவன், யூதன்,.நாத்திகன் என உயிர்களை பிரித்துப் பார்ப்பதில்லை. மாறாக, அனைவரும் ஆதத்தின் மக்களே என சமமாக பார்க்கிறது.

எல்லாக் குழந்தையும் பிறக்கையில் முஸ்லிமாகவே பிறக்கின்றன. குழந்தையை வளர்க்கும் தாய் தந்தை எந்த மதத்தைச் சார்ந்திருக்கிறார்களோ அந்த மதத்தைச் சார்ந்தே குழந்தை வளர்ப்பும் அமைகின்றன.

‪‎இஸ்லாத்தின் பெயரால் செயல்படும் ISIS , தாலிபான், போகோ ஹராம். அமைப்புகள் செய்யும் கொலைகளை இஸ்லாம் அனுமதிப்பதில்லை என்றும்.

இறுதியாக, எந்தமதத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களின் உயிர்களுக்கு பாதுகாப்பு அளிப்பவர்களாக முஸ்லிம்களாகிய நாம் ஒரு இந்தியனாக, தமிழனான கடமைப்பட்டுள்ளோம் என்பதை விளக்கும் ஜூமுஆ சிறப்புரை.

ஜுமுஆ சிறப்புரை @ மஸ்ஜிதுல் இஹ்ஸான், கோவை

நாள்: 04/17/15

உரை: மௌலவி. முஹம்மது இஸ்மாயில் இம்தாதி


உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்...

Friday, April 3, 2015

தொலைக்காட்சியா-கொலைக்காட்சியா..!!

இன்றைய நவீன யுகத்தில் ஒவ்வொருவரின் வீட்டிலும் தவறாது இடம்பெறும் உபயோகப்பொருட்களில் தொலைக்கட்சியும் ஒன்று. இன்றய சமூகத்தில் இளம் தலைமுறையினர் மட்டுமின்றி பரவலாக காணப்படும் ஒழுக்க வீழ்ச்சிக்கும் கருத்தியல் மாற்றத்திற்கும் காரணியாக அமைவது இந்த தொலைக்கட்சி என்றால் அது மிகையாகாது.


இன்றைய கால சூழலில் தொலைக்கட்சியில் இடம்பெறும் நிகழ்சிகளின் தாக்கம் மற்றும் அதன் எதிர்விளைவுகளைக் குறித்து சிறிதும் சிந்திக்காமல் போட்டி மனப்பான்மையினாலும் நுகர்வியல் கலாச்சாரத்தின் ஆணிவேராகவும் திகழ்ந்து கொண்டிருக்கும் தொலைக்காட்சி சேனல்கள் தங்களது நிகழ்ச்சியின் தரம் குறித்தோ அல்லது சமூகத்தில் அது ஏற்ப்படுத்தும் எதிர்விளைவுகளைக் குறித்தோ சிறிதும் சிந்திப்பவர்களாக இல்லை என்பது வேதனைக்குரிய ஒன்று.

இன்றைய சமூக கட்டமைப்பையும் அதன் அஸ்திவாரத்தையும் சிறுகச்சிறுக அறித்திக்கொண்டிருக்கும் தொலைக்கட்சி என்ற சீரழிவை நாம் எவ்வாறு கையாள்வது மற்றும் முஸ்லிகளின் நன்மையை ஏவும் தீமையை தடுக்கும் பணியினை இவ்வாறான தொலைக்கட்சி நிகழ்ச்சிகளுக்கு எதிராகவும் மேற்கொள்ளப்படவேண்டிய முக்கியத்துவத்தையும் விளக்கும் ஜூமுஆ சிறப்புரை.

ஜுமுஆ சிறப்புரை @ மஸ்ஜிதுல் இஹ்ஸான், கோவை

நாள்: 04/03/15

உரை: மௌலவி. முஹம்மது இஸ்மாயில் இம்தாதி

உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்