Friday, April 3, 2015

தொலைக்காட்சியா-கொலைக்காட்சியா..!!

இன்றைய நவீன யுகத்தில் ஒவ்வொருவரின் வீட்டிலும் தவறாது இடம்பெறும் உபயோகப்பொருட்களில் தொலைக்கட்சியும் ஒன்று. இன்றய சமூகத்தில் இளம் தலைமுறையினர் மட்டுமின்றி பரவலாக காணப்படும் ஒழுக்க வீழ்ச்சிக்கும் கருத்தியல் மாற்றத்திற்கும் காரணியாக அமைவது இந்த தொலைக்கட்சி என்றால் அது மிகையாகாது.


இன்றைய கால சூழலில் தொலைக்கட்சியில் இடம்பெறும் நிகழ்சிகளின் தாக்கம் மற்றும் அதன் எதிர்விளைவுகளைக் குறித்து சிறிதும் சிந்திக்காமல் போட்டி மனப்பான்மையினாலும் நுகர்வியல் கலாச்சாரத்தின் ஆணிவேராகவும் திகழ்ந்து கொண்டிருக்கும் தொலைக்காட்சி சேனல்கள் தங்களது நிகழ்ச்சியின் தரம் குறித்தோ அல்லது சமூகத்தில் அது ஏற்ப்படுத்தும் எதிர்விளைவுகளைக் குறித்தோ சிறிதும் சிந்திப்பவர்களாக இல்லை என்பது வேதனைக்குரிய ஒன்று.

இன்றைய சமூக கட்டமைப்பையும் அதன் அஸ்திவாரத்தையும் சிறுகச்சிறுக அறித்திக்கொண்டிருக்கும் தொலைக்கட்சி என்ற சீரழிவை நாம் எவ்வாறு கையாள்வது மற்றும் முஸ்லிகளின் நன்மையை ஏவும் தீமையை தடுக்கும் பணியினை இவ்வாறான தொலைக்கட்சி நிகழ்ச்சிகளுக்கு எதிராகவும் மேற்கொள்ளப்படவேண்டிய முக்கியத்துவத்தையும் விளக்கும் ஜூமுஆ சிறப்புரை.

ஜுமுஆ சிறப்புரை @ மஸ்ஜிதுல் இஹ்ஸான், கோவை

நாள்: 04/03/15

உரை: மௌலவி. முஹம்மது இஸ்மாயில் இம்தாதி

உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்

No comments:

Post a Comment