Friday, March 27, 2015

யார் நீ..!!

ஒவ்வோர் மனிதனும் என்றாவது ஓர் நாள் குறிப்பிட்ட ஓர் நபரை சந்தித்தால் அது தனது வாழ்நாள் சாதனையாக கருதக்கூடிய இக்காலகட்டத்தில் நாம் மறந்தும் நம்மிடமே கேட்காத கேள்வி
யார் நீ ?.



நான் நல்லவனா ?

நான் நல்ல முஸ்லிமா ?

நான் முழுமையான முஸ்லிமா ?

இந்தக் கேள்விகளை நாம் நம்மிடமே கேட்டு சுயபரிசோதனை செய்துகொண்டு தெளிவு பெறாதவரை நமது செயல்கள் மறுமையில் இறைவனது பார்வையில் நாம் எப்படி முஸ்லிமாக இருக்கப்போகிறோம் ?.

நமக்கு நாமே சுய ஆய்வு மேற்க்கொண்டு நம் வாழ்வின் ஒவ்வோர் கணமும் இறைவனின் நினைவிலும் அவனுக்கு அடிபணிந்தவனாக வாழ்வதன் முக்கியத்துவத்தையும் விளக்கும் ஜூமுஆ சிறப்புரை.

ஜுமுஆ சிறப்புரை @ மஸ்ஜிதுல் இஹ்ஸான், கோவை

நாள்: 03/27/15

உரை: மௌலவி. முஹம்மது இஸ்மாயில் இம்தாதி

உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்

Friday, March 20, 2015

இறை அருட்க்கொடைகளைக் கொண்டு கற்றலும் அதன் நோக்கமும்..!!




இறைவன் மனிதனுக்கு அளித்திருக்கும் செவி, நாக்கு, கண், சிந்திக்கும் திறன் போன்ற அருட்க்கொடைகளைக் கொண்டு அவனது கட்டளைகளைக் கற்ப்பதும் அதனை நமது வாழ்வில் நடைமுறைப் படுத்துவதும், அதன் மூலம் பிறருக்கு இஸ்லாத்தைக் குறித்த ஓர் உயிருள்ள எடுத்துக்காட்டாக விளங்குவதன் முக்கியத்துவத்தையும் விளக்கும் ஓர் சிந்தனையத் தூண்டும் ஜூமுஆ சிறப்புரை.

ஜுமுஆ சிறப்புரை @ மஸ்ஜிதுல் இஹ்ஸான், கோவை

நாள்: 03/20/15

உரை: மௌலவி. முஹம்மது இஸ்மாயில் இம்தாதி

உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்