Wednesday, February 8, 2017

என்ன செய்யப் போகிறோம் நாம்..?




முஸ்லிம்கள் தங்கள் அடையாளங்களை துறக்க வேண்டும் என்பது போன்ற வெளிப்புற நிர்ப்பந்தங்களுக்கு எதிராக ரோசம் கொண்டு, போராட்ட குணத்தை நாம் வெளிப்படுத்துகிறோம். ( உதாரணம்: ஹிஜாப்,முகத்திரை, ஹலால் உணவு மற்றும் இன்ன பிற.)

இது போன்ற நிர்ப்பந்தமான சூழல்களில் , நமது இஸ்லாமிய மரபை பேணாததற்காக இறைவன் நம்மை குற்றம் பிடிக்க போவதில்லை. ஏனென்றால் அவை நிர்பந்தம் காரணமாக செய்யபடுகிற குற்றங்கள்.!
(உதாரணம்: நிர்பந்த குப்ர் )

ஆனால் எவ்வித புறத் தடைகளோ, நிர்ப்பந்தங்களோ இல்லாமேலேயே,
பல்வேறு இஸ்லாமிய சட்டங்களை நாமே சுயமாக புறக்கணித்துக் கொண்டு இருக்கிறோமே.!

இதற்காக நாம் மறுமையில் கண்டிப்பாக பதில் சொல்லியாக வேண்டுமே!
(உதாரணம்: திருமண நடைமுறைகள், வாரிசுரிமை சட்டங்கள், இன்னும் பல..)
இறைவன் மறுமையில் நம்மையெல்லாம் கண்டிப்பாக விசாரிப்பான். அப்படிப்பட்ட விவகாரங்களில் உலகில் நீங்கள் என்ன செய்து கொண்டு இருந்தீர்கள்?

எதைக் கடைப்பிடித்தீர்கள்?

இஸ்லாமிய மரபுகளை நடைமுறைப்படுத்த என்ன முயற்சி எடுத்தீர்கள் என கேட்பான்.! அப்படிப்பட்ட விவகாரங்களில் , நாம் எவ்வித அக்கறையும் கவலையும் இல்லாமல் காலத்தை கழிக்கிறோம். சட்டத்தை நாமே மீறுகிற போது நமது இஸ்லாமிய உணர்வும் ரோஷமும் ஏன் மழுங்கிப் போகிறது.?

குற்றங்களை மற்றவர் செய்தால் தான் தவறு. அதே குற்றத்தை , அல்லது அதை விட பெரியதை நாமே செய்கிற போது அது தவறில்லை என நினைப்பது பனு இஸ்ரவேலத்தனமல்லவா.? இப்படிப்பட்ட மனநிலையின் காரணமாகத்தான் அவர்கள் இறைவனால் இழிவடைய செய்யப்பட்டார்கள்
சிந்திக்க வேண்டிய, ஒவ்வொருவரும் சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டிய விஷயம் அல்லவா இது.?


என்ன செய்யப் போகிறோம் நாம்..?

No comments:

Post a Comment